ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: கால்டாக்சிகள் இன்று ஓடாது
ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கால் டாக்சி வாகன டிரைவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
சென்னை,
ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கால் டாக்சி வாகன டிரைவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இது குறித்து தமிழக கால்டாக்சி மற்றும் அனைத்து வாகன டிரைவர்கள் சங்க தலைவர் ரெட்சன் சி.அம்பிகாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழர்களின் கலாசாரம் பண்பாட்டின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டை அழிக்க நினைப்பது தமிழ் இனத்தையே அழிப்பதற்கு சமம். போராடும் தமிழக இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர்களுடன் போராடும் வகையில் நாளை (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் அனைத்து கால் டாக்சிகளும் இயங்காது. அனைத்து டிரைவர்களும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.