எப்படி திரள்கிறார்கள்? என்று தெரியாமல் விழிப்பு உளவுத்துறை போலீசாரை கிறங்கடித்த மாணவர்கள்

மக்கள் பிரச்சினைக்காக அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் முறைப்படி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்.

Update: 2017-01-19 22:12 GMT
மக்கள் பிரச்சினைக்காக அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் முறைப்படி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்.

இதற்கு அனுமதி வழங்குவதற்காக காவல்துறையில் உளவுத்துறை என்ற தனிப்பிரிவு இயங்கி வருகிறது. அனுமதி வழங்குவது மட்டுமின்றி, அனுமதியின்றி நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே ரகசியமாக சேகரிக்கும் பணியையும் உளவுத்துறை போலீசார் தான் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களோடு மக்களாக சாதாரண உடையில் மிகவும் விழிப்புடன் செயல்படும் உளவுத்துறை போலீசாரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டுவது போல மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் அமைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் எப்படி திரள்கிறார்கள்? எவ்வளவு பேர் திரள்கிறார்கள்? அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறார்கள்? என்ற எந்த விவரமும் தெரியாமல் உளவுத்துறை போலீசார் கையை பிசைந்து விழிக்கிறார்கள். இந்த போராட்டம் உளவுத்துறை போலீசாரை கிறங்கடித்துள்ளது என்றால் மிகையாகாது. 

மேலும் செய்திகள்