பிறந்து சில நாட்களே ஆன நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக மீட்பு குப்பையில் வீசிச் சென்றவர்களை போலீசார் தேடுகிறார்கள்
சங்கரன்கோவிலில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. அந்த குழந்தையை குப்பைக் கொட்டும் இடத்தில் வீசிச் சென்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
ஆண் குழந்தை
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 6-ம் தெரு கீழ் பகுதியில் குப்பைகள் கொட்டும் இடம் உள்ளது. அந்த பகுதியில் நேற்று மாலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக சங்கரன்கோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, அங்கு இறந்து கிடந்த குழந்தையின் தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் இருந்ததும், அந்த குழந்தை பிறந்து சில நாட்களே ஆகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் தேடுகிறார்கள்
குழந்தை பிறந்து சில நாட்களே ஆகி இருப்பதால் கள்ளக்காதலில் பிறந்ததா? அல்லது குழந்தையின் வளர்ச்சி சரியில்லாத காரணத்தால் பெற்றோரே குழந்தையை குப்பையில் வீசிச் சென்றனரா? அந்த குழந்தையின் சாவுக்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசிச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.