மோடி உருவ பொம்மை எரிப்பு: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைதாகி விடுதலை
மத்திய பா.ஜனதா அரசு மற்றும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டாவை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் முற்றுகை
ராயபுரம்,
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய பா.ஜனதா அரசு மற்றும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டாவை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதற்காக மாநில தலைவர் அமீர்அம்சா தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து வடக்கு கடற்கரை ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது மத்திய அரசு மற்றும் பீட்டாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய அவர்கள் திடீரென பிரதமர் மோடி உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், உருவ பொம்மையில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் போலீசாருக்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பின்னர் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தடுப்பு வேலியை தாண்டி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அனைவரும், அதன்பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.