நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தட்டம்மை தடுப்பூசி அவசியம்
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தட்டம்மை தடுப்பூசி அவசியம்.
வேலூர்,
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் 9 மாத குழந்தைகள் முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் வரை தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்கான முகாம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வேலூரில் கலெக்டர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சத்து குறைபாடுகள் ஏற்பட்டு பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே, சமூகத்தில் தட்டம்மை பாதிப்பை குறைத்து குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த தடுப்பூசி முகாம் அவசியமானதாகும்.
தடுப்பூசி போட வேண்டும்
இதே போன்று ரூபெல்லா என்னும் ஜெர்மன் தட்டம்மையானது கருவுற்ற பெண்களை தாக்கும்போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தை கண்புரை, காது கேளாமை மற்றும் இருதய நோய் தாக்கத்துடன் பிறக்கும். எனவே, குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.
மாவட்டத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் 100 சதவீதம் இலக்கினை அடைந்திடும் வகையில் பள்ளி கல்வித்துறை, ஊட்டச்சத்து, சமூக நலத்துறை மற்றும் மின்சாரத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து துறை சார்பாக கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
அலுவலர்களுக்கு முகாம் குறித்த முறையான பயிற்சி வழங்கவும், அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி வழங்கவும், இம்முகாமின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் கூட்டங்கள் நடத்திடவும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர்புற ஆரம்பசுகாதார நிலையத்தின் மூலம் முகாமிற்கான உரிய ஏற்பாடுகளை செய்வதை உறுதி செய்யவும், முகாம் நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் உலக சுகாதார நிறுவன மேற்பார்வை அலுவலர் சுதிர்ஜோஷி, கண்காணிப்பு அலுவலர் ராஜுவ்குமார், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கலிவரதன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் சுரேஷ், தேவபார்த்தசாரதி, சாந்தி, குழந்தைகள் நல மருத்துவர் தேரணிராஜன் மற்றும் அனைத்துத்துறை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.