வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் போராட்டம்
வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
பயணிகள் போராட்டம்
வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கு வேலை மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் சென்னை செல்வதற்காக அதிகாலை 4½ மணி அளவில் பயணிகள் மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக காத்திருந்தனர். ஆனால் 4½ மணிக்கு வர வேண்டிய ரெயில் வரவில்லை.
இதனையடுத்து பயணிகள் அதிகாலை 4.50 மணிக்கு வர உள்ள கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி அதில் தங்களை ஏற்றி அனுப்புமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள், சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் நிற்காது என்பதால் அவ்வாறு செய்ய முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் வாலாஜா ரோடு ரெயில் நிலைய தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில்...
பயணிகளின் போராட்டத்தால் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சென்னைக்கு சென்றனர். அதிகாலை 4½ மணிக்கு வரவேண்டிய காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்ததாக தெரிகிறது.
இந்த போராட்டத்தினால் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.