ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செல்போன் கோபுரத்தில் ஏறி பட்டதாரி வாலிபர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாமக்கல்லில் செல்போன் கோபுரத்தில் ஏறி பட்டதாரி வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்,
பட்டதாரி வாலிபர்கள்
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வேல்முருகன் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் கவின்ராம் (22). பட்டதாரிகளான இவர்கள் இருவரும் நண்பர்கள். நாமக்கல்லில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த இவர்கள், திடீரென நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறினர். சுமார் 300 அடி உயரம் கொண்ட அந்த கோபுரத்தில் 200 அடி உயரம் வரை ஏறிய அவர்கள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இறங்க மறுப்பு
இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாமக்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன், கவின்ராம் ஆகிய இருவரையும் கீழே இறங்கி வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்கள் இறங்கி வர மறுத்து விட்டனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒலிபெருக்கி உதவியுடன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் கோபுரத்தில் இருந்து இறங்கி வர மறுப்பு தெரிவித்து விட்டனர். இதை தொடர்ந்து நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, அவர்களை இறக்கும் முயற்சி நடைபெற்றது. இருப்பினும் அவர்கள் கீழே இறங்கவில்லை.
போராட்டம் தொடரும்
இதையடுத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜா கோபுரத்தில் சிறிது தூரம் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரிடமும் பேசி அவர்களை கீழே இறங்க செய்தார். கீழே இறங்கி வந்த அவர்கள், அவசர சட்டம் கொண்டு வந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர். பின்னர் அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பட்டதாரி வாலிபர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நேற்று அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக அந்த செல்போன் கோபுரத்தின் அடியில் அவர்களது நண்பர்கள் ராம் (20), மூர்த்தி (23) ஆகிய இருவரும் பதாகை ஏந்தியபடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் தமிழர்களின் காளை இனத்தை அழிக்காதே, ‘பீட்டா’ அமைப்பை தடை செய் என்ற வாசகம் இருந்தது.