ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க கோரி கோவையை குலுங்க வைத்த மாணவர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க கோரி மாணவர்கள் கோவையில் நேற்று 2-வது நாளாக வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்தினர்.
மாணவர்கள் போராட்டம்
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்க கோரியும் கோவை வ.உ.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் விடிய, விடிய மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். 2-வது நாளாக நேற்று வரலாறு காணாத அளவுக்கு கோவையில் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன.
வகுப்புகளை புறக்கணித்தனர்
கோவை பாரதியார்பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். துடியலூர், வட்டமலைப்பாளையம், ஜி.என்.மில்ஸ் ஆகிய பகுதியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கோவை மற்றும் புறநகரில் உள்ள கல்லூரிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் வகுப்புகளை புறக்கணித்து விட்டு அணி, அணியாக கோவை வ.உ.சி. மைதானத்துக்கு திரண்டு வந்தனர்.
கோவை கொடிசியாவில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் அணிவகுத்து திரண்டு வந்ததால் அவினாசி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் மாணவர்கள் கோஷமிட்டபடி வந்தனர். நேரம் செல்லச் செல்ல நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், புறநகர் பகுதிகளில் இருந்தும் குவிந்ததால் வ.உ.சி. மைதானம் மாணவர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
கோவை நகரம் குலுங்கியது
கோவை நகரில் உள்ள 18 கல்லூரிகள் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேலான கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் நகரின் நாலாபுறம் இருந்தும் ஊர்வலமாகவும், கண்டன கோஷங்களை எழுப்பியவாறும் தொடர்ந்து அணி, அணியாக வந்ததால் கோவை நகரமே குலுங்க தொடங்கியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
வ.உ.சி. மைதானத்தில் குவிந்த மாணவ-மாணவிகள் அமைதியான முறையில் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் பதாகைகளை பிடித்தபடியும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்டநேரம் உட்கார்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். காளை மாட்டு உருவப்படங்களை முகமூடிகளாகவும் அணிந்து கொண்டு பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பறை அடித்து கண்டனம்
பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் குழு, குழுவாக உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பறை அடித்தபடியும், மேளம் அடித்தபடியும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாணவ -மாணவிகளும் சட்டையில் கருப்பு சின்னம் அணிந்தபடியும், கருப்பு கொடியை பிடித்தபடியும் எதிர்ப்பு கோஷங்களை முழங்கினார்கள். சில மாணவர்கள் வ.உ.சி மைதானத்தில் நடப்பட்டு இருந்த கம்பங்களின் மீது ஏறி நின்று கொண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். சக மாணவ-மாணவிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்கள் கம்பங்களில் இருந்து கீழே இறங்கினார்கள்.
சாலை மறியல்
போராட்டம் நடத்திய மாணவர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில் அவினாசி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 20 நிமிட மறியலுக்கு பின்னர் மாணவர்கள் மீண்டும் வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர்.
நடிகர் பாலாஜி ஆதரவு
நானும் ரவுடிதான், கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்த, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, மாணவர்கள் போராட்டம் நடத்திய பகுதிக்கு வந்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது மாணவர்கள் நடிகர் பாலாஜியை தூக்கி வைத்து பாராட்டினர்.கோவை கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ரேக்ளா வண்டிகளுடன் வந்து, மாணவ -மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மாணவர்களின் போராட் டத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாணவர்களின் போராட்டம் காரணமாக அவினாசி சாலை உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் நேற்று காலை முதல் மாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வ.உ.சி. மைதானத்தில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியதால், அவினாசி ரோடு அண்ணா சிலையில் இருந்து உப்பிலிபாளையம் சிக்னல்வரை மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து உசூர் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது. அவினாசிரோடு மேம்பாலம் வழியாக ரெயில் நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இதனால நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மாணவர்களின் போராட்டம் காரணமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போராட்டம் தொடர்ந்து அமைதியான முறையிலேயே நடைபெற்றது. இரவில் வ.உ.சி.மைதானம் அருகே உள்ள அவினாசி சாலையில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
அப்போது அவர்கள் பஸ்சை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப் பட்டனர்.
பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து மைதானத்திற்குள் சென்றனர்.
எங்கள் நாட்டிலும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு: ‘மாணவர்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டு போனேன்’ ஸ்பெயின் நாட்டுக்காரர் பேட்டி
கோவை வ.உ.சி. மைதானத்தில் மாணவர்களின் போராட்டத்தை காண ஸ்பெயின், பிலிப்பைன்ஸ், மங்கோலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆர்வலர்கள் வந்திருந்தனர். இதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மொரிசியோ என்பவர் கூறியதாவது:-
எனது நண்பர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவன பணிக்காக இந்தியா வந்தேன். ஜல்லிக்கட்டுக்கு தடை காரணமாக இங்கு மக்கள் நடத்தும் போராட்டத்தை காண வந்தேன். எங்கள் நாட்டில் காளை சண்டை மிகவும் பிரபலம். விளையாட்டின் போது 5 காளைகளை கொல்வார்கள். ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய விளையாட்டு என்பதால் அந்த விளையாட்டுக்கு அங்கு தடை விதிக்கப்படவில்லை. எனக்கு தெரிந்த வரையில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு அமைதியான முறையில் காளைகளை தழுவி விளையாடும் விளையாட்டு. இங்கு காளைகள் கொல்லப்படுவதில்லை. அதனால் ஜல்லிக்கட்டு இங்கு கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டிற்காக காளைகள் போல் திரண்ட மாணவர்கள் கூட்டத்தை பார்த்து நானும் நண்பர்களும் மிரண்டு போனோம்.
இவ்வாறு மொரிசியோ கூறினார்.
போராட்டத்துக்கு முதியவர்களும் ஆதரவு
கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை முதியவர்கள் பலர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதில், கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பூபாலன் (வயது 72) என்பவர் கூறும் போது, ‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பாதுகாக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை மாணவர்களுடன் சேர்ந்து நானும் போராடுவேன். இதற்காக நான் சிறை செல்லவும் தயாராக உள்ளேன்’ என்றார். இதனால் உற்சாகம் அடைந்த மாணவர்கள் முதியவரை தூக்கி வைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு நடக்காவிட்டால் வாக்களிக்க மாட்டோம் மாணவ-மாணவிகள் ஆவேசம்
கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். அவசர சட்டம் பிறப்பித்து உடனடியாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்றும் கோஷமிட்டனர். மேலும் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் தேர்தல்களில் மாணவ-மாணவிகள் வாக்களிக்க மாட்டோம் என்றும் ஆவேசத்துடன் கூறினர்.
பாடை கட்டி போராட்டம்
கோவை தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் பாடை கட்டி போராட்டம் நடத்தினர். இதில் மாதம்பட்டி பிரசாந்த், அருள், நொய்யல் கார்த்தி, தீபக், வைரம் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை சரவணம்பட்டியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, கோஷமிட்டனர்.
கோவை கணபதி நெ.3 பஸ் நிலையத்தில் தமிழ் அமைப்புகள் சார்பிலும், சூலூர் பஸ் நிலையம் அருகில் மாணவர்கள், இளைஞர் இணைந்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சமூக வலைதளம் மூலம் ஒன்று கூடினர்
கோவையில் நேற்று நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் வாட்ஸ்-அப் மற்றும் முகநூல், இணையதளம் வாயிலாக கோவையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ-மாணவர்களுக்கும் தகவல் அனுப்பியதால் போராட்டத்துக்கு ஆதரவாக ஒன்று திரண்டு கூடினார்கள். மேலும், போராட்டத்தில் அரசியல் கலக்காமல் மாணவர்கள் பார்த்துக்கொண்டனர். மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைய சமூக வலைதள பிரசாரம் பலமாக அமைந்ததாக மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
கொளுத்தும் வெயிலிலும் மாணவர்களுக்கு இணையாக பங்கேற்ற மாணவிகள்
கோவையில் மாணவ-மாணவிகள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆவேசத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர். இதில், மாணவர்களுக்கு இணையாக, மாணவிகளும் அதிக அளவில் கலந்து கொண்டு உணர்ச்சிகரமாக ஆவேசத்துடன் பேசினார்கள். பகல் 12 மணியளவில் வெயில் மேலும் அதி கரித்ததால், மாணவிகள் தலையில் துப்பட்டா துணிகளை போட்டுக்கொண்டு இடத்தை விட்டு நகராமல் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியிலும் சில மாணவிகள் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் மைதானத்தில் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவியின் உடல் நலம் தேறி வருவதாக மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர்.
‘தலைப்பாகை அணிந்த தமிழனாக மாறி போராட்டத்தை ஆதரிக்கிறேன்’ கோவையில் வசிக்கும் பஞ்சாப்காரர் பேட்டி
கோவை வ.உ.சி. மைதானத்தில் மாணவ-மாணவிகள் போராட்டம் நடைபெற்ற போது அங்கு வந்த கோவையில் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த டோனிசிங் (வயது 52) என்பவர் கோவை வ.உ.சி. மைதானத்துக்கு வந்து மாணவ-மாணவிகளிடம் கைகொடுத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அவரை மாணவ- மாணவிகள் மிகவும் பாராட்டினர்.
ஜல்லிக்கட்டு தடை குறித்து டோனிசிங் கூறியதாவது:-
தமிழர்களின் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும். பஞ்சாபில் காளைக ளுடன் போட்டி நடத்தப்படுகிறது. சில மாநிலங்களில் யானை ஊர்வலம் நடத்தப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் குதிரை ஊர்வலம் மற்றும் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில கலாசாரத்தின்படி போட்டி மற்றும் வீரவிளையாட்டு நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் வீரவிளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளிக்க வேண்டும்.
நான் பஞ்சாப்காரனாக இருந்தாலும், கோவையில் நீண்டநாட்களாக தமிழர்களுடன் இணைந்து வாழ்கிறேன். எனவே தலைப்பாகை அணிந்த தமிழனாக மாறி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு இங்கு வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
காளைகளுடன் வந்த மாணவர்கள்
கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலை அறிவியல் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவ கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, வேளாண்மை கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சில மாணவர்கள் காளை மாடுகளுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். பொருட்காட்சி மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்த மாட்டின் கட்-அவுட்டை கழற்றி மாணவர்கள் கூட்டத்துக்கு மத்தியில் வைத்து கோஷமிட்டனர். சில மாணவர்கள் புலி வேஷ மிட்டு நடனமாடியடி போராட்ட களத்துக்கு வந்தனர். கொளுத்தும் வெயிலில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகளுக்கு தண்ணீர், பிஸ்கெட் மற்றும் உணவு பாக்கெட்டுகளை மாணவர் சங்க அமைப்பினர் வழங்கினார்கள்.