கருகிய நெற்பயிருடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

மீன்சுருட்டி அருகே கருகிய நெற்பயிருடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

Update: 2017-01-19 00:19 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடாலிகருப்பூர், கண்டிங்கொல்லை, அன்னகரம் பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று மீன்சுருட்டி அருகே வடவார் கிராமத்தில் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கருகிய நெற்பயிர்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விளை நிலங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் விவசாயிகள் தாசில்தார் வர வேண்டும் என கூறினர். இதையடுத்து தாசில்தார் கலிலோ ரகுமான், வருவாய் ஆய்வாளர் ராசகோபால் ஆகியோர் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், அரியலூர் கலெக்டர் மூலம் ஒரு குழு அமைத்து வறட்சி பாதித்த விளைநிலங்களை மீண்டும் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து, விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்