ஆவடி அருகே அரசு பள்ளியில் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் திருட்டு

ஆவடி அருகே அரசு பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள் அங்கு இருந்த கம்ப்யூட்டரை திருடி சென்றனர்.

Update: 2017-01-18 23:34 GMT
ஆவடி,

ஆவடி அருகே அரசு பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள் அங்கு இருந்த கம்ப்யூட்டரை திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அரசு பள்ளி பூட்டு உடைப்பு

ஆவடியை அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளி திறக்கப்பட்டது. அப்போது பள்ளியின் அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு ஆசிரியர்களும் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.பள்ளி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவதி பட்டாபிராம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்