நினைவு தினத்தையொட்டி ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பொதுவுடைமை வீரர் ஜீவா நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2017-01-18 22:54 GMT
நாகர்கோவில்,

நினைவு தினம்

பொதுவுடமை வீரர் ஜீவா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் அமைந்துள்ள ஜீவா மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேற்று, மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. தலைமையில் அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டு ஜீவா சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதில் நாகர்கோவில் கோட்டாட்சியர் ராஜ்குமார், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஜஸ்டின் செல்வராஜ், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்) டேனியல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாலை அணிவிப்பு

இதேபோல குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் ஜீவா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உடனிருந்தார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் மகேஷ், வக்கீல் உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதைப்போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் மணிமண்டபத்தில் உள்ள ஜீவா சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கமோகன், அன்பரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்