காஞ்சீபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் பேரணி

காஞ்சீபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-17 21:31 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

பேரணி

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை போலீசார் கைது செய்ததற்கு கண்டனம், அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காஞ்சீபுரத்தில் மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு பின்னர் பேரணியாக காஞ்சீபுரம் காமராஜர் தெரு, தாலுகா அலுவலகம் வழியாக மூங்கில் மண்டபத்தை அடைந்தனர்.

இந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், லட்சுமிபதி, அண்ணாதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக புதிய பஸ் நிலையம் வரை சென்றனர்.

சிங்கபெருமாள் கோவில் அருகேயும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்