மதுரவாயலில் பெண் தீக்குளித்து தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
மதுரவாயலில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
பூந்தமல்லி,
மதுரவாயலில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
தீக்குளித்து தற்கொலை
மதுரவாயல், வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி பிரேமா (வயது 26). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மாதேஷ்வரன் என்ற 10 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த பிரேமா நேற்று முன்தினம் இரவு திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி பிரேமா இறந்து போனார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆவதால் அம்பத்தூர் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.