மதுபான கடைகளை அகற்ற உத்தரவு: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் முதல்–அமைச்சரிடம் கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2017-01-17 22:00 GMT

புதுச்சேரி,

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 200–க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. இந்தநிலையில் சட்டசபை வளாகத்தில் மதுபான கடை உரிமையாளர்கள் நேற்று மாலை முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்துப் பேசினர்.

அப்போது புதுவையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றினால் 200–க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற வேண்டும். இதனால் பெரிய அளவில் அரசுக்கு வருமானம் பாதிப்பு ஏற்படும். தங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே அந்த இது தொடர்பாக புதுவை அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்