சேலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இளைஞர்கள் சாலை மறியல்
சேலம் 5 ரோட்டில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்,
சாலை மறியல்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் சேலத்திலும் பல அமைப்பினர், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று மாலை சேலம் 5 ரோட்டில் 200–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் ராமசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், வின்சென்ட், கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாரின் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.