ஓமலூர் பகுதியில் தடையை மீறி எருதாட்டம்
ஓமலூர் பகுதியில் போலீஸ் தடையை மீறி எருதாட்டம் நேற்று நடந்தது.
ஓமலூர்,
எருதாட்டம்
ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி போலீஸ் தடையை மீறி எருதாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் எம்.செட்டிபட்டி, பெரியேரிப்பட்டி, அமரகுந்தி ஆகிய இடங்களில் எருதாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று தொளசம்பட்டி அருகே உள்ள ரெட்டிபட்டி புடவைகாரியம்மன் கோவில் வளாகத்தில் தடையை மீறி எருதாட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்று எருதாட்டத்தை கண்டு களித்தனர்.
பூஜை
முன்னதாக 50–க்கும் மேற்பட்ட காளைகள் கோவில் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காளைகளுக்கு பூஜை செய்து கயிற்றினை கழுத்தில் கட்டி கோவில் மற்றும் ஊரினை வலம் வந்தனர். தொடர்ந்து 50–க்கும் மேற்பட்ட காளைகளை வைத்து எருதாட்டம் நடத்தினர்.
இதேபோல் தும்பிபாடி, வரக்கபிள்ளையூர் மாரியம்மன் கோலில் வளாகத்தில் 30–க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு எருதாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.