ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தேனியில் முகநூல் நண்பர்கள் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தேனியில் முகநூல் நண்பர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தேனியில் முகநூல் நண்பர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னமனூரில் பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவபொம்மையை எரித்தனர்.
தேனியில் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முகநூல் (பேஸ்புக்) எனும் சமூக வலைதளங்களில் நட்பாய் இணைந்து, முகநூல் நண்பர்கள் என்ற பெயரிலும் தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தேனி பங்களாமேடு பகுதியில் முகநூல் நண்பர்கள் சார்பில், ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சாலையோரம் அணிவகுத்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டன கோஷங்கள்
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்து, தேனி வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம், நாம் தமிழர் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் அன்பழகன், நடிகர் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பாண்டி உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
உருவ பொம்மை எரிப்பு
இதே போல் சின்னமனூரில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் பீட்டா அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.
இதில் சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போடி
போடியில் தேவர் சிலை அருகே கல்லூரி மாணவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டுக்கு தடை விலக்க கோரியும் கோஷமிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பார்வர்டு பிளாக் கட்சியினரும், தமிழ் தேசிய பேரியக்கத்தை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சாலை மறியல்
பெரியகுளம் வடகரையை சேர்ந்த சேகர் என்பவர் மனைவி ஸ்ரீனி (46), தென்கரையை சேர்ந்த ஜெயராஜ் (42), அன்னஞ்சியை சேர்ந்த பாண்டி (32) ஆகியோர் ஜல்லிக்கட்டு தடையை நீக்கவேண்டும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவேண்டும், நதிநீர் இணைக்கவேண்டும் என வலியுறுத்தி, தேனி- பெரியகுளம் சாலையில் அன்னஞ்சி விலக்கு அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.