பொங்கல் விழா தகராறில் வாலிபர் கொலை: மேலும் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

ஆண்டிப்பட்டி அருகே மாட்டுபொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அடித்து கொலை

Update: 2017-01-17 22:00 GMT
கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகே மாட்டுபொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

5 பேருக்கு வலைவீச்சு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிராமத்தில் கடந்த 15-ந் தேதி மாட்டுபொங்கல் கொண்டாட்டத்தின் போது இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் மகன் நாகபிரபு (வயது 23) அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணன், பாண்டி, முனீஸ்வரன் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு குலாம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள சக்திகணேசன், பிச்சை, பாலமுருகன், மொக்கராஜ் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆகிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்