ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை கைது செய்ததை கண்டித்து உண்ணாவிரதம்
மதுரை அருகே உள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், அதற்கு ஆதரவு தெரிவித்தும் ஏராளமானோர் நேற்று முன்தினம் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
கடத்தூர்,
மதுரை அருகே உள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், அதற்கு ஆதரவு தெரிவித்தும் ஏராளமானோர் நேற்று முன்தினம் விடிய விடிய போராட்டம் நடத்தினர். அவ்வாறு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்தும், அவர்களை விடுவிக்க கோரியும் கோபி பெரியார் திடலில் ‘நம்ம கோபி பவுன்டேசன்’ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் டாக்டர் அனூப் தலைமை தாங்கினார். செயலாளர் முகமது ஆசீன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.