காரைக்குடி, சிங்கம்புணரி பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம்

காரைக்குடி, சிங்கம்புணரி பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் தமிழகம் முழுவதும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமான பீட்டா

Update: 2017-01-17 22:30 GMT

சிங்கம்புணரி,

காரைக்குடி, சிங்கம்புணரி பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

தமிழகம் முழுவதும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமான பீட்டா அமைப்பை கண்டித்தும் பல்வேறு இடங்களில் இளைஞர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், வாடிப்பட்டி பகுதியிலும், சென்னை மெரினாவிலும் நேற்று இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.

இதேபோல் சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகே இளைஞர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது அவர்கள் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், அலங்காநல்லூரில் அறவழியில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ததை கண்டித்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோ‌ஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திகேயன் என்பவர் கூறும்போது, இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என ஏராளமானோர் மாநிலம் போராட்டம் நடத்தி வரும்வேளையில், மத்திய–மாநில அரசுகள் மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெற வழி வகுக்க வேண்டும் என்றார்.

சிங்கம்புணரி அருகே உள்ள முறையூரில் கிராமமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. மேலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

காரைக்குடி

காரைக்குடியில் தமிழ் அமைப்பினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். மேலும் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ததை கண்டித்தும், பீட்டா அமைப்பை நாட்டில் தடை செய்ய கோரியும் அவர்கள் போராட்ட கோ‌ஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்