காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட வாலிபர் சாவு அடித்துக் கொலை செய்யப்பட்டாரா?
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு சமத்துவபுரம் அருகே ரோட்டில் ரத்தக்காயங்களுடன் கிடந்த கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கணபதி புரம் தெற்கூரை சேர்ந்த தினகரன்(வயது 23) என்பவர்நேற்று முன்தினம் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு சமத்துவபுரம் அருகே ரோட்டில் ரத்தக்காயங்களுடன் கிடந்த கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கணபதி புரம் தெற்கூரை சேர்ந்த தினகரன்(வயது 23) என்பவர்நேற்று முன்தினம் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு நேற்று இறந்து போனார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மல்லாங்கிணறு போலீசார் கருதுகிறார்கள். இந்த நிலையில் தகவல் அறிந்து தினகரனின் தந்தை ராமகிருஷ்ணன் மதுரைக்கு விரைந்து வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, தினகரன் 2 வருடத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றும் இதுவரையில் எங்கிருந்தார் என்பது தெரியாமல் இருந்தது என்றும் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.