பழனி பஸ் நிலையத்தில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

பழனி பஸ் நிலையத்தில் நேற்று இரவு 10–க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கைகளில் ஜல்லிக்கட்டுக்கு விதித்துள்ள, தடையை கண்டித்து துண்டு பிரசுரங்கள், வைத்திருந்தனர். அன;

Update: 2017-01-17 22:00 GMT

பழனி

பழனி பஸ் நிலையத்தில் நேற்று இரவு 10–க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கைகளில் ஜல்லிக்கட்டுக்கு விதித்துள்ள, தடையை கண்டித்து துண்டு பிரசுரங்கள், வைத்திருந்தனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு வந்த போலீசார், அவர்களை கண்டித்தனர். ஆனாலும் சற்று நேரம் கோ‌ஷமிட்ட பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்