திருப்பூர் மாநகர காவல்துறையில் பராமரிப்பு இல்லாத வாகனங்கள்; நடுவழியில் பழுதாகும் அவலம்
திருப்பூர் மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் போதிய பராமரிப்பு இல்லாததால், அவை நடுவழியில் பழுதாகும் அவலநிலை உள்ளது.
அரசு வாகனங்கள்
திருப்பூர் மாநகர காவல்துறையில் ஒரு போலீஸ் கமிஷனர், 2 துணை கமிஷனர்கள், 4 உதவி கமிஷனர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார், ரோந்து போலீசார் ஆகியோருக்கு அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர இருசக்கர ரோந்து வாகனங்களும் உள்ளன. இதுபோல் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுவாக அரசு துறை வாகனங்களை பொறுத்தவரை சிறு, சிறு பழுதுகள் என்றால் அருகில் உள்ள தனியார் பணிமனைகளில் பழுதுநீக்கம் செய்து கொண்டு, அதற்கான தொகையை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பெரிய பழுதுகள் என்றால் அரசு பணிமனைக்கு மட்டுமே வாகனங்களை கொண்டு செல்லவேண்டும்.
பராமரிப்பு இல்லை
திருப்பூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அரசு வாகனங்களை பழுதுநீக்க திருப்பூரில் அரசு வாகன பணிமனை இல்லை. இதனால், திருப்பூரில் பயன்படுத்தப்படுத்தப்பட்டு பழுதாகும் அரசு வாகனங்களை கோவையில் உள்ள அரசு பணிமனைக்கு தான் கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது.
இதற்கு போதுமான கால அவகாசம் தேவைப்படுவதால் காவல்துறை மற்றும் அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் பல நேரங்களில் இந்த வாகனங்கள் நடுவழியிலோ அல்லது ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டு விட்டாலோ பழுதாகி அங்கேயே நின்று விடுகின்றன. அதன்பின் அவற்றை தள்ளிக்கொண்டு செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது.
பழுதாகி நின்ற வாகனம்
இந்த நிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் செல்லும் பகுதிக்கு அவருடன், பாதுகாப்பு பணிக்கு தனி வாகனத்தில் அதிவிரைவு படை போலீசார் 10 பேர் எப்போதும் உடன்செல்வது வழக்கம். அதன்படி நேற்று திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமுக்காக போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் மற்றும் அதிகாரிகள் வந்து இருந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணிக்கு கமிஷனருடன் அதிரடிப்படை வீரர்கள் ஒரு வாகனத்தில் வந்தனர்.
போதிய பராமரிப்பு இல்லாததால், அந்த வாகனம் அங்கேயே பழுதாகி நின்றது. இதனால் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் அந்த வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்றனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர், அந்த வாகனம் இயங்க தொடங்கியது. கமிஷனருடன் பாதுகாப்பு பணிக்கு செல்லும் வாகனத்தின் நிலையே இப்படி என்றால், பிற வாகனங்களின் நிலை எப்படி இருக்கும்? எனவே அரசு வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், திருப்பூரில் அரசு வாகன பணிமனை அமைக்க வேண்டும் என்றும் அரசு வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.