ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் நிறைவேற்றக்கோரி சிதம்பரத்தில் த.மா.கா.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் நிறைவேற்றக்கோரி சிதம்பரத்தில் த.மா.கா.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-17 22:00 GMT
கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் நிறைவேற்றக்கோரியும், மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தி, கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும், மத்திய மாநில அரசை கண்டித்தும் சிதம்பரம் காந்திசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் தில்லைமக்கீன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜெமினிராதா, மாவட்ட துணை தலைவர் ராஜாசம்பத்குமார், தொண்டரணி தலைவர் தில்லைக்குமார், மகளிரணி தலைவர் ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை தலைவர் சம்பந்தம் மூர்த்தி வரவேற்றார்.

கோரிக்கைகள்

சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் வக்கீல் வேல்முருகன் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முத்துக்குமார், பாலா, ஸ்டீபன், ராதா, ராஜன், குமார், பட்டாபிராமன், துரைமுருகன், மகளிரணி நிர்வாகிகள் மாலா, பூபா, மீனா, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்