வங்கிகளின் தொடர் விடுமுறையால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதி

மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு பிரச்சினை இன்னும் ஓயவில்லை.

Update: 2017-01-17 23:00 GMT
நாகர்கோவில்,

வங்கிகளில் வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏ.டி.எம்.களில் நாள் ஒன்றுக்கு ரூ.2,500 வரை எடுக்கலாம் என்று இருந்த உச்சவரம்பு, ரூ.4,500 ஆக அதிகரித்து தற்போது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே பொங்கல் தினமான கடந்த 14–ந் தேதி (சனிக்கிழமை) முதல் நேற்று (எம்.ஜி.ஆரின் 100–வது ஆண்டு பிறந்தநாள் விடுமுறை) வரை 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் குமரி மாவட்ட மக்கள் வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள்.

 கிராமப்புறங்களில் ஏ.டி.எம்.கள் இன்னும் சரியாக செயல்படாததால் அவர்கள் ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க முடியவில்லை. ஏற்கனவே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பல தொடர்ந்து மூடியே கிடக்கின்றன. செயல்பட்டுக் கொண்டிருந்த ஏ.டி.எம்.களில் வங்கிகளின் தொடர்விடுமுறை காரணமாக பணம் இல்லாமல் மூடப்பட்டிருந்தன. சில ஏ.டி.எம்.களில் “பணம் இல்லை“ என்ற அறிவிப்பு பலகையும் தொங்க விடப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க ஒவ்வொரு ஏ.டி.எம். ஆக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டது. அதேநேரத்தில் தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்.கள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.

மேலும் செய்திகள்