முன்னாள் பெண் கவுன்சிலரின் கணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

ஆரல்வாய்மொழியில் முன்னாள் பெண் கவுன்சிலரின் கணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-01-17 20:37 GMT
ஆரல்வாய்மொழி,

முன்னாள் பெண் கவுன்சிலர்

ஆரல்வாய்மொழி, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராமையா (வயது 65), தொழிலாளி. இவரது  மனைவி இல்லறஜோதி. இவர் ஆரல்வாய்மொழி பேரூராட்சி 16–வது வார்டு முன்னாள் பெண் கவுன்சிலர் ஆவார்.

ராமையா கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், உடல் நலம் சீராகவில்லை. இதனால் ராமையா  மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற ராமையா நேற்று முன்தினம்  வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். வாயில் நுரை தள்ளியபடி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆரல்வாய்மொழி  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்