படவேட்டில் எருது விடும் திருவிழா

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு கிராமத்தில் எருதுவிடும் திருவிழா நேற்று நடைபெற்றது.;

Update: 2017-01-17 22:45 GMT
கண்ணமங்கலம்,

நேற்று முன்தினம் காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகளும், பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும், இரவு 10 மணி அளவில் காளியம்மன் சிம்மவாகனத்தில் திருவீதிஉலாவும் நடந்தது. நேற்று பகலில் காளியம்மன் திருவீதிஉலா நடந்தது.

அதைத்தொடர்ந்து பகல் 1 மணி அளவில் எருதுவிடும் திருவிழா நடந்தது. இவ்விழாவில் 100–க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் காளைகள் கொண்டு வரப்பட்டு தெருவில் ஓடவிட்டனர்.

இவ்விழாவை பல்வேறு ஊர்களிலிருந்து திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு கண்டு மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்