திருமக்கோட்டை அருகே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
திருமக்கோட்டை அருகே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருமக்கோட்டை,
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
திருமக்கோட்டை அருகே உள்ள மேலநத்தம் கிராமத்தை சேர்ந்த புலேந்திரன் கண்டியர் என்பவர், தனது வீட்டில் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலையை அமைத்து ஆண்டுதோறும் விழாவாக கொண்டாடி, அன்னதானம் வழங்கி, மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறார். அதேபோல் இந்த ஆண்டு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும், மாணவ-மாணவிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் மேலநத்தம் கிளை செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகிராமன், கோட்டூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய தலைவருமான ஜீவானந்தம், மன்னார்குடி கூட்டுறவு பால் வழங்கும் சங்க முன்னாள் செயலாளர் வீரமணி, கோட்டூர் ஒன்றிய துணை செயலாளர் தியாகராஜன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வெற்றிபாலு, ஒன்றிய பொருளாளர் ராஜகோபால் ஆகியோர் எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமக்கோட்டை செல்லத்துரை, பாலையக்கோட்டை ராஜமன்னார், வல்லூர் சுரேஷ், பைங்காநாடு மலர்வேந்தன், ஒத்தவீடு சந்தானம், பரவை சிவமதியழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் தனபால், மாவட்ட பிரதிநிதி அருணாசலம், ஊராட்சி கழக செயலாளர் முனுசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் போஸ்ராஜன், திருமக்கோட்டை கூட்டுறவு வங்கி துணை தலைவர் ரஞ்சித் குமார், ஒன்றிய விவசாய அணி இணை செயலாளர் சாமிநாதன் மற்றும் கிளை செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் மீனாட்சி சுந்தரம், திருச்சி ராபர்ட், மகவை ஆறுமுகம் ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில், முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.