சென்னை மற்றும் புறநகரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
சென்னை மற்றும் புறநகரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சென்னை,

தீபா மாலை அணிவித்தார்
அ.தி.மு.க. நிறுவனரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். உருவசிலைக்கு நேற்று காலை முதல் நபராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் இயக்குனர்கள் பாரதிராஜா, விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தயாரிப்பாளர் தாணு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பி.எச்.பாண்டியன்
நேற்று பகல் 2 மணி அளவில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொண்டர்கள் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு வார விடுமுறை செவ்வாய்க்கிழமை. ஆனால் எம்.ஜி.ஆர். பிறந்த தினம், நினைவு தினம் மற்றும் காணும் பொங்கல் ஆகிய நாட்கள் செவ்வாய்க்கிழமை வந்தால் அன்று எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்தவகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினம் செவ்வாய்க்கிழமையான நேற்று வந்ததால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அன்னதானம்
சென்னையை அடுத்த ஆலந்தூர் ஆசர்கானாவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன் உள்பட பலர் மாலை அணிவித்தனர். பெருங்குடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. கந்தன் மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார்.
உள்ளகரம்-புழுதிவாக்கத்தில் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்தார். பெரும்பாக்கம் பகுதியில் ஒன்றிய முன்னாள் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினார்.
திருவொற்றியூர்
திருவொற்றியூர் தேரடியில் எம்.ஜி.ஆர். படத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எல்லையம்மன் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொருளாளர் ஆர்.பத்மநாபன் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்.
மாதவரம் பகுதி 19-வது வட்ட அ.தி.மு.க. சார்பில் மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு வட்ட செயலாளர் கே.பிரதாபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகளும், 1000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. முன்னாள் கவுன்சிலர் கே.பார்த்திபன், முன்னாள் ஒன்றிய பேரவை துணைச் செயலாளர் மாத்தூர் கே.துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.