பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் திருநங்கைகள் அரைநிர்வாண போராட்டம் அவதூறாக பேசிய வாலிபரை கைது செய்யக்கோரி

பாளையங்கோட்டை போலீஸ்நிலையத்தில் திருநங்கைகள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-17 19:30 GMT

நெல்லை,

திருநங்கைகளிடம் அவதூறாக பேசிய வாலிபரை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி பாளையங்கோட்டை போலீஸ்நிலையத்தில் திருநங்கைகள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநங்கைகள் போராட்டம்

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் சில திருநங்கைகள் நின்று கொண்டு இருந்தார்கள் அவர்களை ஒரு வாலிபர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி திருநங்கைகள் நேற்று பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் திருநங்கைகள் தான் அந்த வாலிபரிடம் தகராறு செய்ததாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் புகார் கொடுக்க வந்த திருநங்கைகளை வெளியே செல்லுமாறு கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து 10–க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று மதியம் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரை நிர்வாணத்தில் இருந்தனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்