நாகர்கோவில் அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா

நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா 10 நாட்கள் நடந்தது.

Update: 2017-01-17 22:30 GMT
நாகர்கோவில்,

திருவிழாவின் 9–வது நாள் காலையில் அருட்பணியாளர் டைனிசியஸ் தலைமையில் முதல்திருவிருந்து திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில், அருட்பணியாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றினார். மாலையில் மறை மாவட்ட செயலாளர் பெலிக்ஸ் தலைமையில் செபமாலை, திருப்பலி போன்றவை நடந்தன.  இதில் அருட்பணியாளர் மரியசூசை மறையுரையாற்றினார். தொடர்ந்து சமபந்தி விருந்து நடந்தது.

திருவிழா இறுதிநாளில் காலையில் அருட்பணியாளர் சாலமோன் தலைமையில் நடந்த திருப்பலியில் அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றினார். மாலையில் செபமாலை, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி மன்ற பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.  இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜாண் பீட்டர், பங்கு அருட்பணி பேரவை, பங்குமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்