உடுமலை அருகே மரத்தில் கார் மோதி 2 போலீஸ்காரர்கள் பலி
கோவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற போது காரின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து;
குடிமங்கலம்
உடுமலை அருகே கோவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற போது காரின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போலீஸ்காரர்கள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 36), இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், கவின் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர். இவர் குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இதேபோல் உடுமலை டி.வி.பட்டணத்தில் வசித்து வந்தவர் சரவணக்குமார் (33). இவருக்கு காயத்திரிதேவி என்ற மனைவியும், தியாஸ்ரீ(7) என்ற மகளும் உள்ளனர். சரவணக்குமார் குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
உடுமலை அருகே உள்ள ஆல்கொண்டமால் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் வருவது வழக்கம். இதையொட்டி இங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மரத்தில் கார் மோதி 2 பேர் பலி
இந்த நிலையில் ஆல்கொண்டமால் கோவிலில் பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக போலீஸ் ஏட்டு சவுந்தர்ராஜனும், போலீஸ்காரர் சரவணக்குமாரும் புறப்பட்டனர். இதற்காக ஏட்டு சவுந்தர்ராஜனுக்கு சொந்தமான காரில் நேற்று அதிகாலை அவர்கள் சென்று கொண்டிருந்தனர். ஏட்டு சவுந்தர்ராஜன் காரை ஓட்டிச்சென்றார். கோட்டமங்கலம் அருகே கார் சென்ற போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பகுதியில் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன் காரணமாக கார் அப்பளம் போல் நொறுங்கி யது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட சவுந்தர்ராஜன், சரவணக்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். அத்துடன் இது தொடர்பாக உடுமலை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சந்திரகாந்தா ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று சவுந்தர்ராஜன், சரவணக்குமார் ஆகியோரது உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இறந்த போலீஸ்காரர்களின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள், நண்பர்கள் அழுத காட்சி கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. கோவில் பாதுகாப்பு பணிக்காக சென்ற போது போலீஸ்காரர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.