மயான கொட்டகையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
லாலாப்பேட்டையில் வெற்றிலை கொடிகள் கருகியதால் மனவேதனை அடைந்த விவசாயி, மயான கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாலாப்பேட்டை,
விவசாயி தற்கொலை
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 54). விவசாயி. இவர் பிள்ளப்பாளையத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் வெற்றிலை கொடிக்கால் சாகுபடி செய்திருந்தார். போதிய அளவு தண்ணீர் இல்லாததால் வெற்றிலை கொடிகள் வெயிலில் கருகி விட்டன. இதனால் மனவேதனை அடைந்த கோவிந்தன் தனது குடும்பத்தினரிடம் சில நாட்களாக புலம்பிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் நேற்று காலை லாலாப்பேட்டையில் உள்ள மயான கொட்டகையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதனை அந்த வழியாக காவிரி ஆற்றிற்கு குளிக்க சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து லாலாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.