காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்
காணும் பொங்கலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
பெரம்பலூர்,
காணும் பொங்கல்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். வீட்டில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்தனர். சிலர் தங்களது நண்பர்கள், உறவினர்களுடன் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ரஞ்சன்குடிக்கோட்டை, கல்மரப்பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.
இதேபோல் காணும் பொங்கலை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நற்பணி மன்றம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அந்தந்த தெரு சிறுவர், சிறுமிகள், வாலிபர்கள், இளம்பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பரிசுகள்
இளவட்டக்கல்லை தூக்குதல், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், சிலம்பம், கபடி உள்ளிட்ட போட்டிகள் வாலிபர்களுக்காக நடத்தப்பட்டன. கோலப்போட்டி, பாட்டிலில் நீர் நிரப்புதல், ஸ்கிப்பிங் உள்ளிட்ட போட்டிகள் இளம்பெண்களுக்கும், சாக்குப்போட்டி, கரண்டியில் எலுமிச்சை பழத்தை வைத்து ஓடுதல், ஓட்டப்பந்தயம், முறுக்கு கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் சிறுவர்-சிறுமிகளுக்கும் நடத்தப்பட்டன.
மேலும் மாலையில் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து காணும் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த அமைப்புகள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவிலை தோரணங்கள்
அந்த வகையில் பெரம்பலூர், குரும்பலூர், வேப்பந்தட்டை, மங்களமேடு, திருமாந்துறை, அத்தியூர், ஒகளூர், கீழப்பெரம்பலூர், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து ஊராட்சிகளிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஊரின் பொது இடத்தில் மாவிலை தோரணங்கள், கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் கோலங்கள் போடப்பட்டு இருந்தன. இங்கு ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கபடி, சைக்கிள் போட்டி, கோ-கோ உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.