வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்,
உதவித்தொகை
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப் படுகிறது. எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 31.12.2015 அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
31.12.2016 அன்று தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. அதேபோன்று மற்ற வகுப்பினர்கள் 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. அரசால் வழங்கப்படும் பிற உதவித்திட்டங்கள் ஏதும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ-மாணவியாக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம்.
வங்கி கணக்கு புத்தகத்துடன்...
மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை, ஒரு புகைப்படம் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 28.2.2017-க்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து உதவித்தொகை பெறலாம். மேலும் இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே பயனடைந்தவர்கள் புதிதாக விண்ணப்பம் பெற தேவையில்லை.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.