புதுக்கோட்டை, கொன்னைப்பட்டியில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

புதுக்கோட்டை, கொன்னைப்பட்டியில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.

Update: 2017-01-16 22:45 GMT
புதுக்கோட்டை,

மாட்டுப்பொங்கல்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான கால்நடை பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பசு மாடுகள், பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அனைத்து பசுமாடுகளையும் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டினர். பின்னர் பொங்கல் வைத்து மாடுகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து மாடுகளுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அங்குள்ள பிடாரி அம்மன் கோவில் முன்பு கணபதி ஹோமம், மகாலெட்சுமி பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் கொன்னைப்பட்டி, மூலங்குடி, தச்சம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கொன்னைப்பட்டி பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்