பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்
ஆயிங்குடி, விராலி மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
ராயவரம்,
விளையாட்டு போட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் அருகே ஆயிங்குடி உள்ளது. இங்குள்ள பொன்னியம்மன் கோவில் தெருவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், நாற்காலியில் உட்காருதல், கண்களை கட்டி நொண்டி விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறுவர்-சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆவூர்
இதேபோல் விராலிமலையில் உள்ள அம்மன் கோவில் தெருவில் தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதற்கு விராலிமலை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் தலைமை தாங்கினார். தொடர்ந்து ஓட்டப்பந்தயம், புத்தகம் சுமக்குதல், நூல் கோர்த்தல், எலுமிச்சை பழம் எடுத்தல், பளுதூக்குதல், இசை நாற்காலி, கோலப்போட்டிகள், பானை உடைத்தல், திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. பின்னர் மாலையில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.