ஜல்லிக்கட்டு மீதான தடையை கண்டித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டு மீதான தடையை கண்டித்து சூரியூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
திருவெறும்பூர்,
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல்பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியவில்லை. அந்த தடையை நீக்கக்கோரி விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெறும் திருச்சி மாவட்டம் சூரியூரில், நவல்பட்டு போலீசார் சூரியூர் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வைத்திருப்பவர்களை அழைத்து தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மாட்டோம் என்று எழுத்துபூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டனர். மேலும், தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடு எதுவும் செய்யப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்தனர்.
போராட்டம்
இதனால், சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தாமல் அந்த ஊரில் உள்ள நற்கடல்குடி கருப்பண்ண சுவாமி மற்றும் முத்துமாரியம்மன் கோவில் மாடுகள் மட்டும் அலங்கரிக்கப்பட்டு மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன. பின்னர் அந்த மாடுகளுக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மீண்டும் பட்டிக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டன.
அப்போது நற்கடல்குடி கருப்பண்ணசுவாமி இளைஞர் மன்றத்தினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.