வீட்டில் பணம்-பொருட்கள் திருடிய வாலிபர் கைது

மானூர் அருகே வீட்டில் பணம்- பொருட்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2017-01-16 22:15 GMT
மானூர்,

பொங்கல் பண்டிகை

மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரை சேர்ந்தவர் ராசையா (வயது 53). இவர் தற்போது குடும்பத்துடன் கேரள மாநிலம் மூணாறில் வசித்து வருகிறார். இவர் பொங்கல் பண்டிகைக்காக தனது சொந்த ஊரான சேதுராயன்புதூருக்கு வந்துள்ளார்.

சம்பவத்தன்று காலை தன்னுடைய உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு, மாலையில் தன்னுடைய வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க வாசல் வழியாக ஒருவர் பொருட்களுடன் ஓடுவதை பார்த்தார்.

வாலிபர் கைது

உடனே ராசையாவும், அவருடைய 2 மகன்களும் ஓடிச் சென்று அந்த நபரை துரத்தி பிடித்து மானூர் போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சேதுராயன்புதூர் காலனி தெருவை சேர்ந்த மகாராஜன் என்ற உஷ்மான் (27) என்பதும், அவர் ராசையா வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் மற்றும் 16 ஆயிரத்து 450 ரூபாய் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர். மகாராஜனிடம் இருந்து பொருட்கள் மற்றும் பணத்தை போலீசார் மீட்டடனர்.

மேலும் செய்திகள்