அய்யம்பேட்டையில் அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டையில் அஞ்சுமன் அறிவகத்தை ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி திறந்து வைத்தார்.
அய்யம்பேட்டை,
திறப்பு விழா
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ரெயில் நிலைய சாலையில் அஞ்சுமன் அறிவகம் மற்றும் இஸ்லாமிய கலாசார மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. புருணை தொழிலதிபர் டி.எம்.ஜபருல்லாஹ் அமைத்துள்ள இந்த மையத்தின் திறப்புவிழா நடைபெற்றது.
விழாவிற்கு அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி ஜமாத் சபை தலைவர் ஓ.ஆர்.ஜெ.முகமது பசீர் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் அப்துல் பாரி, ஓ.பி.ஏ.பஷீர் அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் பி.ஏ.நஜீப், நகரச் செயலாளர் கே.அப்துல்நசீர், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் என்.நாசர், ஜெ.சுலைமான்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.பி.ஜெ.முபாரக் வரவேற்றார். விழாவில் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா கலந்து கொண்டு அஞ்சுமன் அறிவகத்தை திறந்து வைத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், இஸ்லாமிய கலாசார மையத்தை திறந்து வைத்தார். சென்னை ரஹமத் பதிப்பக முதன்மை மொழிப் பெயர்ப்பாளர் அ.முகமதுகான், ரிலா அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்.
விழா மலர் வெளியீடு
வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.துரைக் கண்ணு, எம்.ரெங்கசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் விழா மலரை வெளியிட தொழிலதிபர்கள் நஜீர் அகமது ஜக்கரியா, எம்.முகமது யஹியா, கே.நவாஸ் கனி ஆகியோர் மலரை பெற்றுக் கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், சி.எம்.என்.சலீம், என்ஜினீயர் திவான் நஜீர் அகமது ஆகியோருக்கு அபுதாபி தொழிலதிபர் சாகுல் ஹமீது ரிலா விருதுகளை வழங்கினார்.
விழாவில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மை துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் காயல் மகபூப், மாநில செயலாளர் மில்லத் இஸ்மாயில், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் எம்.தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், எஸ்.என்.ஜாபர் சாதிக், ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு அ.கலியமூர்த்தி, கனியார் ரஹீம் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தார்கள், பாசமலர் வெல்பேர் அசோசியேஷன் நிர்வாகிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அ.தமீமுல் அன்சாரி நன்றி கூறினார்.