காட்பாடி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் தங்கம் என்று நினைத்து கவரிங் நகைகளை திருடிய மர்ம கும்பல்

காட்பாடியில் உள்ள கூட்டுறவு மேலாண்மை மையத்தில் தங்க நகை என்று நினைத்து கவரிங் நகைகளை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-01-16 22:45 GMT
காட்பாடி,

கவரிங் நகைகள்

காட்பாடி காந்திநகரில் வேலூர் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் கூட்டுறவு அலுவலகங்களில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கவரிங் நகைகள் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நகை மதிப்பீட்டாளர்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும் நகைகள் கவரிங் என்பதை அறியாமல் தங்கநகை என நினைத்து அதனை திருட மர்ம கும்பல் திட்டம் தீட்டியது. சம்பவத்தன்று இரவு மேலாண்மை பயிற்சி மையத்தின் முன்பக்க கதவை உடைத்து மர்ம கும்பல் உள்ளே சென்றது.

பின்னர் அவர்கள் மையத்தில் இருந்து பீரோவை உடைக்கப்பட்டு அதில் இருந்த கவரிங் நகைகளை திருடிச் சென்றனர்.

மறுநாள் காலையில் பணிக்கு வந்த புஷ்பலதா, மையத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ரூ.7 ஆயிரத்து 500 மதிப்புள்ள கவரிங் நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

வழக்குப்பதிவு

இது குறித்து புஷ்பலதா விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

தங்க நகை என்று நினைத்து கவரிங் நகைகளை திருடிச் சென்று மர்ம நபர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்