தாராபுரம் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதால் பரபரப்பு
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டணத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டணத்தில் பொங்கல் திருவிழாவை பொதுமக்கள் கொண்டாடினர். அங்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தளவாய்பட்டணத்தில் நேற்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளதாக பொதுமக்கள் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து அங்கு உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள அண்ணா திடலில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர்.
பரபரப்பு
அதனால் தளவாய்பட்டணத்தில் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், அலங்கியம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரி ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 காளைகள் அங்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் பொதுமக்கள் காளைகளுக்கு பூஜைகள் செய்து அவற்றை வழிபட்ட னர். அதன் பிறகு அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றனர். இதனை அறிந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதனால் பொதுமக்கள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது. அதன் பின்பு பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடத்தாமல் அங்கிருந்து காளைகளை அழைத்துக்கொண்டு கலைந்து சென்றனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற பொதுமக்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.