ஈரோடு வில்லரசம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதால் பரபரப்பு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு,
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் பொதுமக்கள் சிலர் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை நேற்று மாலை செய்தனர். இதையொட்டி காளை மாடுகளுக்கு மாலை அணிவித்து அழைத்து வந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினார்கள். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதால் வில்லரசம்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.