பள்ளிபாளையம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உள்ளிருப்பு போராட்டம்
பள்ளிபாளையம் வட்டார தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி
பள்ளிபாளையம்,
பள்ளிபாளையம் வட்டார தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பள்ளிபாளையத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. ஆசிரியர்கள் கூட்டணி தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பதிவேட்டில் பெயர் எழுதுவது தொடர்பாக இயக்குனரின் வழிகாட்டுதல்படி நடக்க வேண்டும், இயக்குனர் வழிகாட்டுதல் கிடைக்கும் வரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செயல்முறைகளை மேற்கொள்ளக்கூடாது, உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகளை அமல்படுத்த தீவிரம் காட்டக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதையடுத்து பிரச்சினை தொடர்பாக பேசி முடிவெடுக்கலாம் என்று அதிகாரிகள் கூறினார்கள். அதையொட்டி ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.