மும்பை மாநகராட்சி துணை மேயர் பதவி வேண்டும் ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்

மாநகராட்சி தேர்தலுக்கு பின் தங்கள் கட்சிக்கு துணை மேயர் பதவி அளிக்கப்பட வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

Update: 2017-01-15 23:30 GMT

மும்பை

கூட்டணி

ஆளும் பா.ஜனதா கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சியின் நிறுவன தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:–

பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து மும்பை மாநகராட்சி தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் இந்திய குடியரசு கட்சி அவர்களை முழு மனதுடன் ஆதரிக்கும். இந்த கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 29 இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறோம். இந்த கூட்டணி நிச்சயம் தேர்தலில் எளிமையாக வெற்றிபெறும்.

எனவே மாநகராட்சி துணை மேயர் பதவியை எங்கள் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்துவோம். இது மட்டும் அல்லாமல் குறைந்தது 1 ஆண்டுகளுக்காவது எங்களுக்கு நிலைக்குழு தலைவர் பதவி வழங்கவேண்டும்.

ஓட்டுகள் சிதறும்

அப்படி இல்லாமல் சிவசேனாவும், பா.ஜனதாவும் தனித்தனியே தேர்தலை சந்தித்தால் ஓட்டுகள் சிதறிப்போக வாய்ப்புள்ளது. இந்த இரண்டு கட்சிகளிடேயே கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை எனில் பா.ஜனதா கட்சியுடன் இணைந்து நாங்கள் தேர்தலை சந்திப்போம். எங்களுக்கு குறைந்தது 50 இடங்களாவது ஒதுக்கப்படவேண்டும்.

இவ்வாறு மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

மேலும் செய்திகள்