பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் பலி
மணப்பாறை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மணப்பாறை,
5 பேர் பலி
திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா(வயது 42). ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரும், இவரது நண்பர்கள் ஹரிஹரசுதன்(24), உறையூர் சன்னதி தெருவை சேர்ந்த துவாகரன்(40), சின்ன கம்மாளத் தெருவை சேர்ந்த குணா என்கிற சாமிக்கண்ணு (38), சமஸ்பிரான் தெருவை சேர்ந்த சலீம்(42), ஜீவா நகரை சேர்ந்த சீனிவாசன்(42) உள்பட 10 பேர் கடந்த 13-ந் தேதி திருச்சியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.அன்று இரவு ஆலம்பட்டிபுதூர் பகுதியில் தங்கி விட்டு மறுநாளான 14-ந் தேதி அதிகாலை மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினர். அவர்கள் இரு குழுக்களாக பிரிந்து திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே பாலப்பட்டி பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது சென்னையில் இருந்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் நோக்கி சென்ற கார் ஒன்று பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஹரிஹரசுதன், துவாகரன், சாமிக்கண்ணு, சலீம், சீனிவாசன் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
4 பேர் படுகாயம்
மேலும் பாதயாத்திரை சென்ற குமார் மற்றும் காரில் பயணம் செய்த சம்பாஜி சேட்டு, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ஐஸ்வர்யா ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்தவர்களின் உடல்களை பார்வையிட்டார். பின்னர் விபத்து குறித்து பாதயாத்திரை சென்ற மற்ற பக்தர்களிடம் கேட்டறிந்தார். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார், மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் ராஜா செபஸ்டின்(22) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.