பொங்கலை கொண்டாட தூத்துக்குடி கடற்கரை-வைப்பாறு பகுதியில் குவிந்த மக்கள்
தூத்துக்குடி பகுதி மக்கள் நேற்று கடற்கரை மற்றும் சுற்றுலா பகுதிகளிலும், விளாத்திகுளம் பகுதி மக்கள் வைப்பாறு பகுதியில் குடும்பத்தினருடன் குவிந்து காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
தூத்துக்குடி,
பொங்கல் விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அதிகாலையிலேயே வாசல்களில் வண்ணக் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். பொங்கலுக்கு மறுநாள் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று கிராமங்களில் பசு உள்ளிட்ட மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
மக்கள் கூட்டம்
காணும் பொங்கலையொட்டி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை பூங்கா, துறைமுக கடற்கரை பூங்கா, முயல்தீவு பகுதிகளுக்கு மக்கள் சென்றனர். மக்கள் குடும்பத்தினருடன் அந்த பகுதிகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிட்டு விளையாடினர்.
பூங்காவில்...
ஆனாலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தூத்துக்குடி பகுதியில் காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது. தூத்துக்குடியில் ராஜாஜி பூங்கா உள்ளிட்ட இடங்களில் காலையில் ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. இதனால் தற்காலிக கடைகளில் வியாபாரம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. தூத்துக்குடி பஸ் நிலையங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது.
விளாத்திகுளம்
காணும் பொங்கலை முன்னிட்டு விளாத்திகுளம் பகுதி பொதுமக்கள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள வைப்பாறு ஆற்று பகுதியில் குவிந்தனர். அப்போது வீட்டில் சமைத்து இருந்த உணவு பொருட்களை கொண்டு வந்து, ஆற்றின் மணல்வெளியில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமியர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். இதனால், அப்பகுதியில் தற்காலிக கடைகள் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன. இரவு வரை அப்பகுதியில் கூட்டம் அலைமோதியது.
அதே போல் ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் ஆற்றங்கரையிலும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் குவிந்து காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.