ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீசார் விசாரணை
ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அம்பை,
ஆட்டோ டிரைவர்
அம்பை கோயில்குளம் தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வேலாயுதம் (வயது 25), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று ஆட்களை இறக்கி விட்டு விட்டு ஆட்டோவில் அம்பை ரெயில்வே பாலத்தின் கீழ் சந்தை மடம் தெருவில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை அய்யா கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (34), அதே ஊர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி (26) ஆகியோர் வந்த மோட்டார்சைக்கிள், ஆட்டோ மீது மோதியதாக தெரிகிறது.
அரிவாள் வெட்டு
இதில் 3 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றவே மோட்டார்சைக்கிளில் வந்த சுப்பிரமணியன், இசக்கிபாண்டி ஆகியோரை ஆட்டோ டிரைவர் வேலாயுதம் அரிவாளை எடுத்து வெட்டினாராம். இதற்கு பதிலடியாக சுப்பிரமணியன், இசக்கிபாண்டியனும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வேலாயுதத்தை வெட்டியதாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த 3 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அம்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.