பசுமடத்தில் மாடுகளுக்கு இனிப்பு வழங்கிய அமைச்சர்கள்

திருச்சி பாலக்கரை காஜா பேட்டையில் உள்ள பசு மடத்தில் நேற்று மாட்டுப்பொங்கல் விழா நடந்தது.;

Update: 2017-01-15 22:45 GMT
திருச்சி,

இந்த மடத்தில் உள்ள பசுமாடுகளுக்கு குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தன. சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்பு வைத்து பசுமாடுகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பசுமாடுகளுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் வாழைப்பழங்களை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து சிறுவர் சிறுமியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

மேலும் செய்திகள்