மதுபாட்டில்கள் கடத்திய 6 பேர் கைது

பேரளத்தில் மதுபாட்டில்கள் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம்இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2017-01-15 21:25 GMT
நன்னிலம்,

6 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் பேரளம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்திர சரஸ்வதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் புதுச்சேரி மதுபாட்டில்களை கும்பகோணம் முத்துப்பிள்ளைமண்டபத்தை சேர்ந்த கணேசன் (வயது 23), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (25), பூந்தோட்டத்தை சேர்ந்த பாஸ்கர் (24), தரங்கம்பாடியை சேர்ந்த ஆனந்தராஜ் (20), இஞ்சிக்குடியை சேர்ந்த மதன் (24), பூவாம்பூரை சேர்ந்த அன்பரசன் (23) ஆகிய 6 பேர் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 100 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள் களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்